Home »  Blog » School Owner »  மாற்றத்தை நோக்கி நகரும் இந்தியாவின் பள்ளிகள்

மாற்றத்தை நோக்கி நகரும் இந்தியாவின் பள்ளிகள்

Subscribe to our newsletter

இந்தியாவின் கல்விமுறையின் மாற்றம்.

சமீபத்திய கணக்கெடுப்புகளின் படி, இந்தியாவில் சுமார் 26 கோடி மாணவர்கள் கல்வி கற்க 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குச் செல்கின்றனர். எங்கள் மதிப்பீட்டின்படி, அவர்களில் 25 கோடிப் பேர் சுமாரான கல்வியையே பெறுகிறார்கள். ஒரு மாணவர் ஒரு நாளைக்கு பள்ளியில் சராசரியாக 6 மணி நேரங்கள் செலவிடுகிறார் என்பதைக் கணக்கில் கொண்டால் ஒவ்வொரு நாளும் அவர்களது சுமார் 150 கோடி மணி நேரங்கள் வீணாகின்றன.

துரதிர்ஷ்டவசமாக இது நமது தேசத்தின் மனித ஆற்றலை பெருமளவில் வீணாக்கும். எனவே பள்ளிகளின் அந்த 6 மணி நேரங்களை LEAD School மூலம் சிறப்பானதாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம்.

வழக்கமான பாரம்பரிய முறையில் இயங்கும் பள்ளிகள் 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதத்திலேயே அமைந்திருக்கின்றன. இதன் மூலம் இவை பெரும்பாலும் கல்வித் தொழிற்சாலைகள் போல இருப்பது நமக்குத்தெரியும். ஒரு பள்ளியின் கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு காரணமாக, கற்பித்தல் ஒரு பெரும்பான்மையான மாணவர்களின் சராசரியை வைத்தே கணக்கிடப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு குழந்தையின் முழுமையான திறனை வெளிக்கொண்டு வர அவர்கள் மேல் தனிக்கவனம் செலுத்துவதும், படிப்பில் அவர்களுக்கான தனிப் பாதையை வகுத்து அளிப்பதும் அவசியம். அதன் மூலமே அவர்கள் தம் உண்மையான திறனை அடைய முடியும். இது இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள ஒரு கடினமான பிரச்சினை.

ஆனால், இது மிகவும் கடினமாகத் தெரிந்தாலும், தீர்க்கப்படவே முடியாத பிரச்சினை அல்ல. பள்ளியில் கற்றல் – கற்பித்தல் எவ்வாறு நடக்கிறது என்பதை மறுபரிசீலனை செய்வதன் மூலம் இப்பிரச்சினையை நாம் தீர்க்க முடியும். பொதுவாக பள்ளிகளின் கல்விச் செயல்முறைகளை மேம்படுத்துவதற்கும், பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கும், கற்றல் தொடர்பான பொருட்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் சிறப்பு ஆலோசகர்கள் அல்லது பள்ளிகளுடன் இணைந்து செயல்படும் பயிற்சியாளர்கள் உதவுவார்கள். பள்ளிகளின் தரத்தையும் தேர்ச்சியையும் மேம்படுத்த இது உதவினாலும் மலிவு மற்றும் விலையுயர்ந்த தனியார் பள்ளிகளுக்கு இது மிகவும் செலவு பிடிக்கும் வேலை. மேலும் அந்த நபர் மாறும் போது இதன் தரமும் நிரந்தரத் தன்மையும் பாதிக்கப் படுகிறது.

குறைந்த கட்டணம் பெறும் பள்ளிகளில் கூட நன்கு வேலை செய்ய ஏதுவாகவும், நிலையான மாற்றத்தைத் தருவதாகவும் இருக்கும் ஒரு பள்ளிக்கல்வி முறை நமக்குத் தேவை.

இங்குதான் LEAD School வருகிறது. இது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட பள்ளி (integrated school system) முறையாகும், இது பள்ளிகளுக்கு நியாயமான செலவில் சிறப்பான பலன்களை வழங்குகிறது.

நாங்கள் பள்ளிகளுடன் இணைந்து LEAD School’s integrated system ஐ செயல்படுத்துவதன் மூலம் பள்ளிகளை சிறப்பான கல்வி மையங்களாக மாற்றுகிறோம். ஒரு பள்ளியின் குறைந்த பட்சத் தேவைகளான ஒரு கட்டிடம், போக்குவரத்து, ஃபர்னிச்சர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருந்தால் போதும். பெற்றோர், பள்ளி உரிமையாளர் உள்ளிட்ட அனைவரின் தேவைகளையும் LEAD School’s integrated system கவனித்துக்கொள்கிறது. எங்கள் ஒருங்கிணைந்த பாடத்திட்டம், மென்பொருட்கள் மற்றும் வன்பொருட்கள் மூலம், பள்ளிகளில் முழுமையான செயல்முறையை அமல்படுத்துகிறோம்.

ஒரு பள்ளி, தனக்குத் தேவையான பலவிதமான சேவைகளைப் பெற வெவ்வேறு விற்பனையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் செலுத்துவதை விடக் குறைவான செலவில் LEAD School மூலம் இந்த மாற்றம் நிகழ்கிறது.

இப் பயணம் தொடங்கியது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு. LEAD School இன் இணை நிறுவனர்கள் மற்றும் COO திருமதி.ஸ்மிதா மற்றும் CEO திரு.சுமீத் மேத்தா இருவரும் தங்கள் சொந்தப் பள்ளிகளை நடத்துவதன் மூலம் இந்த பயணத்தைத் தொடங்கினார்கள். ஆனால் கடந்த நான்கே ஆண்டுகளில், LEAD School க்குச் சொந்தமான ஐந்து பள்ளிகளில் இருந்து இந்தியா முழுவதும் 2000 க்கும் மேற்பட்ட பள்ளிகளுடன் இணைந்து நாங்கள் வளர்ந்துள்ளோம். அவற்றின் மூலம் தற்போது 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுடனும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் இணைந்திருக்கிறோம்.

LEAD’S INTEGRATED SYSTEM ஐ ஒரு பள்ளி உபயோகப் படுத்தும் போது கீழ்க்கண்ட 5 சிறந்த விளைவுகள் நடைபெறுகின்றன. அவை அளவிடக் கூடியவையும் கூட.

1. வகுப்பறையில் மாணவர்களின் பரவல்: 29% இல் இருந்து 70% க்கு மேல் மாணவர்களின் அடிப்படைத் திறமைகளில் தேர்ச்சி உயர்கிறது, அதே நேரத்தில் வகுப்பிலுள்ள 74% மாணவர்கள் 70% ற்கு மேல் திறன்களை ஒரே வருடத்தில் எட்டுகின்றனர்.

2. மாணவர்களின் கற்றல் இடைவெளி குறைகிறது: வகுப்பு வாரியான அடிப்படைச் சோதனையுடன் ஒப்பிடும்போது மாணவர்கள் சராசரியாக 1.7 ஆண்டுகள் அளவுக்கான கற்றல் இடைவெளியைக் கொண்டே கல்வியாண்டைத் தொடங்குகிறார்கள். இருப்பினும், LEAD மூலம் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஒரு வருடத்தில் இந்த இடைவெளியைப் பாதியாகக் குறைக்கிறார்கள். அல்லது சில குறிப்பிட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் உதவியுடன் மூன்றே ஆண்டுகளில் சரியான தர நிலையை அடைகிறார்கள்.

சரியான வகுப்புக்கேற்ற ஆங்கிலத்தில் புலமை இருப்பது மாணவர்களுக்கு வாழ்க்கையையே மாற்றும் தருணம். ஏனெனில் அவர்கள் சுயமாக ஆங்கிலத்தில் படிக்கவும் எழுதவும் முடியும் – ஆங்கில மீடியம் பள்ளிகளில் மற்ற பாடங்களும் ஆங்கிலத்தில் இருக்கையில் இது முக்கியமான தேவையாக இருக்கிறது.

3. ஆசிரியர்களின் செயல்திறன் மேம்படுகிறது: நாங்கள் இணைந்து பணிபுரியத் தொடங்கும்போது, 5 மதிப்பீட்டுப் புள்ளிகளில் சராசரியாக 2.5 ஆக இருக்கும் ஒரு ஆசிரியரின் செயல்திறன் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளின் முடிவில் முறையே 4 மற்றும் 4.5 புள்ளிகள் என்ற அளவில் உயர்கிறது.

4. பெற்றோரின் மனத் திருப்தி: இது சமீபத்தில் நாங்கள் கண்காணிக்கத் தொடங்கிய ஒரு நடவடிக்கை. ஆனால் எங்கள் முதல் கணக்கெடுப்பிலேயே என்.பி.எஸ் எனும் பெற்றோர் குறியீட்டுப் புள்ளிகள் 10 – 20 புள்ளிகளால் மேம்படுவதைக் கண்டோம். பெற்றோர்கள் கண்கூடாக மாணவர் தேர்ச்சியையும், அவர்களது திறன் மேம்பாட்டைக் காண்பதாலும், பள்ளிகளுடன் பெற்றோரின் நம்பிக்கையும், ஈடுபாடும் உயர்வதாலும் இது நடக்கிறது.

5. பள்ளியின் புதிய மாணவர் சேர்க்கை 10 முதல் 15 சதவீதம் வரை சராசரியாக உயர்கிறது.

இந்த மிக நவீன முறைகள் மூலம், பாரம்பரிய பள்ளிகள் இயங்கும் முறையையும் மாணவர்கள் கற்கும் அடிப்படை முறையையும் நாம் சிறப்பாக மாற்ற முடியும்.

நாங்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளுடன் எங்கள் சேவையை விரிவுபடுத்துவதன் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய பள்ளிப்படிப்பின் தரத்தில் ஒரு நல்ல, மிகச் சிறந்த மாற்றத்தை உருவாக்குவோம்.

மூலம் – திரு.சுமீத் மேத்தா, Co-founder and CEO of LEAD School
மொழியாக்கம் – எஸ்.கார்த்திகேயன். Senior Academic Excellence Manager, LEAD School.

About the author

Karthikeyan S

மாற்றத்தை நோக்கி நகரும் இந்தியாவின் பள்ளிகள்

சமீபத்திய கணக்கெடுப்புகளின் படி, இந்தியாவில் சுமார் 26 கோடி மாணவர்கள் கல்

Read More

09/12/2022 
Karthikeyan S  |  School Owner

Subscribe to our newsletter

x

Give Your School The Lead Advantage

lead
x
Planning to reopen
your school?
Enquire Now
x

Give Your School The Lead Advantage

x

Download the EBook

x

Download the NEP
Ebook

x

Give Your School The Lead Advantage